02nd March 2021 10:00:24 Hours
இராணுவத்தின் நிரந்த படையில் 34 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெற்ற இராணுவ திட்டமிடல் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏக்கநாயக்கவுக்கு பெப்ரவரி 28 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படை தலைமையகத்தில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
மேஜர் ஜெனரல் கித்சிறி ஏக்கநாயக்க இலங்கை இராணுவத்தில் பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட நியமனங்களில் தேசத்தின் பாதுகாப்பிற்காக சேவையாற்றியுள்ளார். அதன்போது அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. தேநீர் விருந்துபசாரம் மற்றும் அதிகாரிகளுடனான குழு படம் எடுத்தல் என்பவற்றிலும் கலந்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் படையின் பேரவை உறுப்பினர்கள், நிலையத் தளபதி பிரிகேடியர் கிரிஷாந்த பீரிஸ், பதவி நிலை அதிகாரிகள் சிரேஸ்ட அதிகாரிகள், அலகுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
அன்றைய தினம் மாலை அதிகாரிகளின் உணவகத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது. அங்கு ஓய்வுபெற்ற அதிகாரியின் சேவை பெரிதும் பாராட்டப்பட்டார். மேலும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ அவர்களும் ஓய்வுபெற்றும் மேஜர் ஜெனரல் கித்சிரி ஏகநாயக்க அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். Asics shoes | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger