01st March 2021 23:20:19 Hours
இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையிலான நல் உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக, 64 வது படைப்பிரிவின் 17 (தொண்டர்) கஜபா படையின் படையினர் சிவில் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் ஒடுசுட்டான் பகுதியில் வசிக்கும் 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசணை பொதிகளை நவாம் பௌர்ணமி தினத்துடன் இணைந்து வெள்ளிக்கிழமை (26) வழங்கினர்.
சுமார் ரூபா 3000 பெறுமதியுள்ள சத்துமா, பால் மா, டின்மீன், மசாலா, தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட பொதிகளை 642 வது பிரிகேட் மற்றும் 17 வது (தொண்டர்) கஜபா படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் மற்றும் சிவில் நன்கொடையளர்களுனால் பகிர்ந்தளிக்கப்பட்டது.
64 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரியின் ஒருங்கிணைப்பில் முல்லைத்தீவில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்ன பிரதம அதிதியாக கலந்துக் கொண்டதுடன் 642 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரசன்ன விஜேசூரிய, 643 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கர்ணல் ட்ரோல் சில்வா, மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். bridgemedia | Men's Footwear