02nd March 2021 08:14:24 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் 45 வது படை தளபதியாக மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட சீதாவக்க கொஸ்கமயில் அமைந்துள்ள தொண்டர் படையணி தலைமையக வளாகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அன்றைய தினம் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் பிரதம பயிற்சி பரிசோதகர் பிரிகேடியர் நிஹால் சமரவிக்ரம அவர்களால் வரவேற்றகப்பட்டதை தொடர்ந்து புதிய படைத் தளபதிக்கு பிரதான நுலைவாயில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது பின்னர்,பிரதி படைத் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டி ஜயசிங்க அவர்களால் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் "ரெண்டெஸ்வஸ்" மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு இரண்டாவது இலேசாயுத காலாட் படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
பின்னர் மத அனுஸ்டானங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் தனது பதவியேற்பிக்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பிட்டார். பின்னர் தனது பதவியேற்பின் அடையாளமாக மரக்கன்று ஒன்றினை படையணி வளாகத்தில் நட்டிவைத்தார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரதி தளபதி, முதன்மை பணி நிலை அதிகாரி மற்றும் இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தலைமையகத்தின் அனைத்து கிளைத் தலைவர்களுடனும், சேவை செய்யும் உறுப்பினர்கள் மற்றும் தலைமையகத்தின் சிப்பாய்களுடன் தேனீர் விருந்திக்கு சிரேஸ்ட அதிகாரி அழைக்கப்பட்டார். அதன் போது அவர் ஓரிரு எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தனது சுருக்கமான உரையில், ஒழுக்கம், திறன்கள் மற்றும் தொழில் திறன் கொண்ட ஒரு அமைப்பாக முன்னேறுவதன் முக்கியத்துவத்தை அவர் கோடிட்டுக் காட்டினார். மேலும், தற்போதைய இராணுவத் தளபதியால் தொடங்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன் நோக்கிய மூலோபாயம் 2020-2025' குறித்து அவர் கவனம் செலுத்தினார், மேலும் தொண்டர் படையின் மேம்பாட்டிற்கு பொறுப்பான உறுப்பினராக ஒருவரின் கடமைக்கு பொறுப்புக்கூறலை எடுத்துரைத்தார்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகோடா கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதியாக பதவி வகித்தார். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்கவுக்குப் பதிலாக குறுத்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது புதிய நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். Adidas footwear | Nike