01st March 2021 16:14:36 Hours
அதிமேதகு ஜனாதிபதியின் கிராமத்துடன் சுமூகமான சந்திப்பு திட்டத்தின் கீழ் மதவச்சி கோமரன்கடவல பகுதியில் சனிக்கிழமை (27) நடைப்பெற்ற நிகழ்வில் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக பக்மீகம வித்தியாலயத்தின் மைதானத்தை புனரமைக்கும் பணிகள் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய 10 மணி நேரத்துக்குள் ஆரம்பிக்கப்பட்டது.
சனிக்கிழமை (27) கோமரன்கடவலவில் நடைபெற்ற தனது கிராமத்துடன் சுமூகமான சந்திப்பு என்ற நிகழ்ச்சியின் போது, மேதகு ஜனாதிபதி அவர்களிடம் அப்பகுதி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இனங்க மேற்கண்ட பணியை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இராணுவத்தின் திறனில் முழு நம்பிக்கை வைத்து மேற்படி பணிளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், தலைமை கள பொறியாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர தனது படையினரை மறு நாள் (28) அன்று அதாவது 10 மணி நேரத்திற்குள் பணிகளைத் தொடங்குமாறு பணித்தார். பொது பொறியியல் பிரிகேட்டின் 7 வது கள பொறியாளர் படைகளின் மனிதவளம், தொழில்நுட்ப நிபுணத்தும் மற்றும் இராணுவ இயந்திரங்களின் உதவிகளுடன் இத்திட்டம் விரைவில் நிறைவு செய்யப்பட உள்ளது. Mysneakers | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf