Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2021 17:32:57 Hours

கவச வாகன படையின் புதிய படைத் தளபதி அலுவலகத்தை பொறுப்பேற்றார்

மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட 2021 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இலங்கை கவச வாகனப் படையின் 13 வது படைத் தளபதியாக மத அனுட்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேற்படி நிகழ்வின் ஆரம்பகட்டமாக மோதரையிலுள்ள கவசப் படையின் நிலையத் தளபதியும் 1வது மீளாய்வு படையின் கட்டளை அதிகாரியினால் வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர் படைத் தளபதிக்கு நிலை உயர்வு மற்றும் புதிய பதவிக்கும், மரியாதை செலுத்தும் வகையில் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

அதனையடுத்து படைத் தளபதி சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சபை உறுப்பினர்கள் முன்நிலையில் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட பணிகளை ஆரம்பித்த பின்னர் அதிகாரிகளுக்கும் சிப்பாய்களுக்கும் உரையாற்றியதுடன் படை தலைமையக வளாகத்தில் சந்தன மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.

பின்னர் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட அவர், பராமரிப்புச் செயற்பாடுகளின் தரத்தை பேணுதல் தொடர்பில் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். Sports Shoes | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth