Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2021 20:30:15 Hours

மாதுறுஓயாவில் விசேட காலாட்படை செயற்பாடுகள் (SIO) பாடநெறியை நிறைவு செய்த அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களின் வெளியேற்ற நிகழ்வு

மாதுறுஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில், 2021 ஜனவரி மாதம் 04 ஆம் திகதி 14 அதிகாரிகள் மற்றும் 258 ஏனைய சிப்பாய்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கப்பட்ட பாடநெறி இலக்கம் - 70 சிறப்பு காலாட்படை செயல்பாடுகள் தொடர்பான (SIO) பாடநெறியானது, 2021 பெப்ரவரி 25 ஆம் திகதி அவர்களின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வுடன் நிறைவுபெற்றது.

இந்த வெளியேற்ற அணிவகுப்பானது, போர் பயிற்சி குழுவின் பயிற்றுவிப்பாளர் மேஜர் வீ.ஏ.டி.ஜெ.டி விதானவினால் தலைமைதாங்கப்பட்டதுடன் இந்த பாடநெறி இலங்கை இராணுவத்தில் பல்வேறு பயிற்சி நிறுவனங்களில் பல பிரிவுகளைக் கொண்டிருந்த்து.

மேலும், 40 வேளை நாட்டகள் நடாத்தப்பட்ட இந்த பாடத்திட்டத்தின் தந்திரோபாயங்கள் பாடநெறியின் முக்கியமான பகுதியாகும்.

இந்த பாடநெறியானது மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் அனில் சமரசிறி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பயிற்சி கட்டளை அதிகாரி கேணல் அனுருத்த சொலங்கராச்சி மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் லெப்டினன் கேணல் ஆர்எஸ்ஏடபல்யுஏகே ஆபேயகோண் ஆகியோரின் மேற்பார்வையில் நடாத்தப்பட்டது.

இந்த பாடநெறியை பூர்த்தி செய்த 14 அதிகாரிகள் மற்றும் 232 இராணுவச் சிப்பாய்களுக்கான (SIO) சின்னங்களானது, நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களினால் அணிவித்து வைக்காப்பட்டன.

அதன்படி இந்த பயிற்சிகளின் போது சிறத்ந சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கான விருதுகள் பிரதம விருந்தினரால் வழங்கப்பட்டது. இதன்போது சிறந்த பிரிவுக்கான விருதுகள் 4வது இலங்கை சிங்கப்படையணியின் படையினருக்கு வழங்கப்பட்டது.

O/71318 இரண்டாம் லெப்டினன் டிஎன்டி டி சில்வா

S/365632 ஸ்டாப் சார்ஜன் சாந்த குமார டிஎச்சி

S/382009 ஆர்எப்எம்.அபேசிறி.ஏஎன்

S/382294 ஆர்எப்எம் நதீஷான் கேஎம்டி

S/378611 ஆர்எப்எம்.கமல் ரத்நாயக்க.ஆர்எம்கேஜி

S/381570 ஆர்எப்எம்.ஏக்கநாயக்க டிஎம்எஸ்கே

S/383315 ஆர்எப்எம் கம்லத். எம்ஜிடிடி

S/384399 ஆர்எப்எம் தனுஷ்க எச்கேஎன்

S/384431 ஆர்எப்எம் கீர்த்திரத்ன டிடிஜீடிஎம்

சிறந்த சூடு – S/2Q03298 7 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் ஸ்டாப் சார்ஜன் ஹேரத் பண்டார எச்எம்ஐ (மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம்)

சிறந்த உடற்கட்டமைப்பு –S/519494 18 வது விஜயபாகு காலாட் படையணியின் கோப்ரல் விக்ரமரத்ன ஆர்டிஎஸ் (முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம்)

சிறந்த பயிலுனர் அதிகாரி – O/70898 12 வது கெமுனு ஹேவா படையணியின் லெப்டினன் பிகேபிபிஜிடபல்யு பீரிஸ்( யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம்)

சிறந்த சிப்பாய் மாணவர் -7 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் ஸ்டாப் சார்ஜன் எச்எம்ஐ ஹேரத் பண்டார (மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம்) Sport media | Nike Air Max 270