25th February 2021 15:48:46 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க புதன்கிழமை (24) கொக்குவில் பகுதியிலுள்ள ஆயுத களஞ்சியம், முறுகந்தி மற்றும் பாரதிபுரத்திலுள்ள தனிமைப்படுத்தல் மையங்கள் ஆகிய இடங்களுக்கு தனது முதல் விஜத்தை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது 6 வது இலங்கை போர்கருவி படையணியினால் பராமரிக்கப்படும் ஆயுத களஞ்சியத்தை பார்வையிட்டதுடன், அதன் பராமாரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் புதிய தளபதிக்கு 573 பிரிகேட் தளபதி மற்றும் 6 வது இலங்கை போர்கருவி படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரினால் விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் களஞ்சிய பாதுகாப்பின் மேம்பாட்டிற்காக செயற்பாடுகளை மறுசீரமைப்புக்கான ஆலோசணைகளையும் படைப்பிரிவினருக்கு வழங்கினார்.
அதனையடு பலநோக்கு செயன்முறை பரிமாற்ற மையத்தை பார்வையிட்ட கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி, சமிக்ஞை கட்டமைப்பின் செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும் கேட்டறிந்துக் கொண்டதுடன், பாரதிபுரம் மற்றும் முறுகந்தி பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களையும் பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின் போது 57 படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதிகள் அதிகாரி, 571,573 வது பிரிகேடுகளின் தளபதிகள், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் 9 வது சமிக்ஞை படையணி மற்றும் 6வது இலங்கை போர்கருவி படையணிகளின் கட்டளை அதிகாரிகள் இணைந்துகொண்டனர். Running sport media | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes