25th February 2021 20:29:01 Hours
இன்று(28) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 460 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 35 பேர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பதுடன் ஏனைய 425 பேரும் உள்நாட்டில் இணங்காணப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் 151 பேர் இரத்தினபுரி மாவட்டம், 59 பேர் யாழ்ப்பாணம் மாவட்டம், 51 பேர் கம்பஹா மாவட்டம், மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களில் 253 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி (28) ஆம் திகதி காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக மரணித்தவர்கள் உட்பட 82,889 தொற்றுள்ளவர்கள் இணங்கானப்படுள்ளதுடன் அவர்களில் 79,244 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி மற்றும் மினுவான்கொடை பிரெண்டெக்ஸ் ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களாவர். 78,372 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 4,053 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 748 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா மரணங்கள் எவையும் பதிவாகவில்லை. அதன்படி (28) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 464 காணப்பட்டது.
மேலும், (28) காலை நிலவரப்படி முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 96 தனிமைப்படுத்தல் மையங்களில் 9,667 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (27) 12,632 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Best Authentic Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov