25th February 2021 18:32:57 Hours
இலங்கை பீரங்கிப் படையணியின் 15 வது ட்ரோன் பிரிவின் படையினரால் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி பனாகொடவில் உள்ள படைப்பிரிவு வளாகத்தில் ட்ரோன் கெமரா பயிற்சி பாடநெறியின் 2வது கட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை பீரங்கிப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ள உலகில் மேற்படி பயிற்சிகளின் முக்கியத்தும் பற்றி விளக்கமளித்தார்.
இந் நிகழ்வில் நிலையத் தளபதி, பீரங்கிப் பிரிகேட் தளபதி சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் ஏனையோரும் பங்கேற்றனர். மேலும் இங்கு படையினருக்கு உரை நிகழ்த்திய மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட இலங்கை பீரங்கி படையணியின் கீழ் ட்ரோன் படையணியை நிறுவுவதற்கு வாய்ப்பை வழங்குதல் மற்றும் புதிய ட்ரோன் கெமராக்களை கொள்வனவு செய்வதற்கான நிதி ஏற்பாடுகளை பெற்றுக்கொடுத்தல் என்பவற்றுக்காக பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
இந்த புதிய படையணி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்புக்காக கலாநிதி மஞ்சு குணவர்தனவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இந்த புதிய படைப்பிரிவை நிறுவும் திட்டமானது பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தூரநோக்கு பார்வைக்கமைய தயாரிக்கப்பட்ட இராணுவத்தி 2020- 2025 வரையான ஐந்தாண்டு மூலோபாய திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளதுடன் முன்பிருந்த ட்ரோன் படையணியை விடவும் 6 புதிய ட்ரோன் கெமராக்களை கொண்டதாக புதிய படையணி உருவாக்கப்பட்டுளை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த பயிற்சி நெறியில் SULECO தனியார் நிறுவனத்தின் ஆலோசகர்களும், நிறுவனத்தின் பணிப்பாளர் ராஜித ஜயசிங்க, பிரதேச முகாமையாளர் அஜ்மல் அஸீஸ் ஆகியோருடன் ஏனைய பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர். trace affiliate link | Nike