25th February 2021 19:32:28 Hours
கலயாயவிலுள்ள இராணுவ பொறியில் சேவைப் பிரிவு பயிற்சி கல்லூரியில் 3 மாத பயிற்சி நெறியை பூர்த்தி செய்துக் கொண்ட 96 புதிய படைவீரர்களின் பிரியாவிடை அணிவகுப்பு பயிற்சிக் கல்லூரியின் தலைமையக வளாகத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இராணுவ பொறியில் சேவைப் படையணியின் படைத தளபதியும் முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரத்னசிறி கணேகொட அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டதுடன், அவருக்கு இராணுவ பொறியில் சேவைப் பிரிவு பயிற்சி கல்லூரியின் படையினரால் காவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.
அதே சந்தர்ப்பத்தில் பயிற்சியின் சிறந்த உடலியல் வலிமையுடைய வீரராக ஜே.டபிள்யூ.சுரங்கா அவர்களும் சிறந்த சூட்டாளராக கே.வி.எல்.ஏ பெர்னாண்டோ மற்றும் சகல துறை வீரராக டபிள்யூ.எம்.எல்.டி விஜேரத்ன தெரிவு செய்யப்பட்டதோடு அவர்களுக்ன சிறப்பு விருதுகள் மேஜர் ஜெனரல் ரத்னசிறி கனேகொட அவரகளினால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தனர். Nike Sneakers | Nike Shoes, Sneakers & Accessories