Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2021 20:32:14 Hours

ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு கண்காட்சியில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி பங்கேற்பு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமால் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் அறிவுறுத்தலின் பிரகாரம், பெப்ரவரி மாதம் 21 -25 வரையில் நடைபெற்ற 15 வது சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடுகளில் (IDEX - 2021) , இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி செனரத் பண்டார ஆகியோரும் பங்கேற்றனர்.

துபாயின் துணைத் ஜனாதிபதியும், பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான மொஹமட் பின் அல் ரஷீட் மக்டோமின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் இலங்கை தூதுக்குழு கலந்துகொண்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் வழிகாட்டலில் அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 900 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபற்றியதோடு, பாதுகாப்புத் துறையில் மிக நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கி இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, இராணுவ பதவி நிலை பிரதானியினால் இராஜதந்திரிகள், நட்பு நாடுகளின் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் பலதரப்பு அனுபவங்களும் பகிர்ந்துக்கொள்ளப்பட்டதுடன், புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் அவர்களின் அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான களமாகவும் இந்த கண்காட்சி அமைந்திருந்தது.

கண்காட்சியில் பல வெளிநாட்டு தயாரிப்புகள், இராணுவ தொழில்நுட்பத்தில் புதிய இணைவுகள், புதுமையான உபகரணங்கள் மற்றும் பிற தொடர்புடைய பாகங்கள், தேசிய பாதுகாப்புத் துறையின் மேம்பாட்டிற்குத் தேவையான உபகரணங்கள், கலந்துகொள்ளும் நிறுவனங்கள் மற்றும் முக்கிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பிற முக்கிய சர்வதேச நிறுவனங்களுக்கு இடையில் புதிய மூலோபாய உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் அறிந்துகொள்ளவும் இந்த கண்காட்சி வழியேற்படுத்தியது.

இதன் போது இலங்கை தூதுக்குழுவிற்கு இராணுவ பதவி நிலை பிரதானி தலைமை தாங்கியதுடன், கடற்படை மற்றும் விமான படையின் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். bridge media | Nike Shoes