25th February 2021 14:15:46 Hours
கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேசத்தின் 33 வது படைத் தளபதியாக பிரிகேடியர் மகேஷ் அபேரத்ன பதவியேற்றுள்ளார்.
இதன்போது தலைமையகத்திற்கு வருகைத் தந்த அவருக்கு காவலர் அறிகையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படையினர் புதிய தளபதிக்கு இராணுவ மரியாதை அளித்தனர். பின்னர் அவர் தலைமையக வளாகத்திற்குள் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.
பின்னர் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் பிரிகேடியர் மகேஷ் அபேரத்ன கைசாத்திட்டார்.
இந்நிகழ்வில் அனைத்து பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். buy footwear | Nike Running