25th February 2021 14:00:46 Hours
உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தின் அதிகாரிகளால் 2021 பெப்ரவரி 16 - 17 ஆகிய தினங்களில், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாய்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தின் லெப்டினன் கேணல் பீ.ஜி.எஸ்.சமந்தி, மேஜர் டி.பி.ஜி.கே. டி அல்விஸ் மற்றும் மேஜர் சுஜித் சமிந்த ஆகியோரால் நடத்தப்பட்ட இந்த பயிற்சிப்பட்டறை, இளைஞர்களின் உற்பத்தித் திறன் மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்பு,போர் இலக்கியம், அறிவு மற்றும் புரிதலுக்கும் இடையிலான பரஸ்பர தன்மை உள்ளிட்ட விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி பட்டறையில் நூறு அதிகாரிகள் மற்றும் 180 சிப்பாய்கள் பங்கேற்றனர். Nike Sneakers | Nike News