Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2021 15:46:30 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி 61 வது படைப்பிரிவுத் தலைமையகத்திற்கு முதல் விஜயம்

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி வசந்த ஆப்ரூ அவர்கள் 61 வது படைப்பிரிவுக்கும் அதன் கீழுள்ள கட்டுபாட்டு அலகுகளுக்குமான தனது முதலாவது விஜயத்தை புதன்கிழமை (24) மேற்கொண்டார்.

படைப்பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு பூசாவில் உள்ள 61 படைப்பிரிவு தலைமையகத்தில் காவலர் அறிக்கையிடல் மரியாதை செலுக்கத்தட்டதுடன், தனது வருகையின் நினைவாக தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைக்குமாறு புதிய தளபதிக்கு 61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே அழைப்பு விடுத்தார்.

அதனையடுத்து 61 படைப்பிரிவின் பணிகள் தொடர்பில் படைப்பிரிவின் தளபதியால் விளக்கம் அளிக்கப்பட்டதுடன், 14 வது தொண்டர் படையணி, கெமுனு ஹேவா படையணி, ருஹுனு தேசிய கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையம் ஆகியவற்றுக்கான விஜயத்தை தளபதி மேற்கொண்டார்.

இந்த விஜயத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 61 வது படப்பிரிவின் சிரேஷ்ட பதவி நிலை அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் இணைந்துகொண்டனர். bridgemedia | nike air max 95 obsidian university blue book list