25th February 2021 14:10:46 Hours
வடக்கில் கண்ணிவெடி அகல்வு வேளைத்திட்டத்தில் ஈடுபடும் ஹலோ அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் எம்.எஸ். செல்வி எலினோர் பொரிட், செவ்வாய்க்கிழமை (23) யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
இந்த நல்லுறவு சந்திப்பின் போது, ஹலோ அறக்கட்டளையின் பொறுப்பிலுள்ள தளங்களில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் மற்றும் கண்ணிவெடி பகுதிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
மேலும் மீள்குடியேற்றத்தை விரைவில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறும் யாழ்.பாதுகாப்பு படைத் தளபதி அவரிடம் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, தளபதி திட்ட முகாமையாளரிடம் அவர்கள் பணிகளை முன்னெடுக்கும் தளங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். affiliate link trace | nike fashion