Header

Sri Lanka Army

Defender of the Nation

24th February 2021 10:00:06 Hours

கடந்த 24 மணித்தியாலங்களில் 13,714 பிசிஆர் பரிசோதனைகள்

இன்று (25) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 458 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சகலரும் உள்நாட்டில் இணங்காணப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் 94 பேர் கொழும்பு மாவட்டம், 76 பேர் கம்பஹா மாவட்டம், 59 பேர் இரத்தினபுரி மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களில் 229 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி (25) ஆம் திகதி காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக மரணித்தவர்கள் உட்பட 81,466 தொற்றுள்ளவர்கள் இணங்கானப்படுள்ளதுடன் அவர்களில் 77,868 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி மற்றும் மினுவான்கொடை பிரெண்டெக்ஸ் ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களாவர். 76,513 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 4,496 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 672 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான 04 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் கல்கிசை,கொடுகொட,பொரலஸ்கமுவ, மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி (25) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 457 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், (25) காலை நிலவரப்படி முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 95 தனிமைப்படுத்தல் மையங்களில் 10,075 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (24) 13,714 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. jordan Sneakers | Nike