23rd February 2021 23:18:03 Hours
இலங்கை பீரங்கி படையின் தலைமையகத்தில் சில தினங்களுக்கு முன்னர் 34 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றிவிட்டு ஓய்வுபெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் மனோஜ் லமாஹேவா அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு பனாகொடையிலுள்ள படைத் தலைமையகத்தில் அனைத்து நிலையினர்களதும் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதன் போது பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கட்ட பின்னர் ஓய்வுபெற்றுச் செல்லும் தளபதி போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அனைத்து நிலைகளுக்குமான தேனீர் விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டதுடன், இரவு அதிகாரிகள் உணவகத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார். அங்கு அவருக்கு நினைவு பரிசு வழங்கி இலங்கை பீரங்கி படையில் இருந்த காலத்தில் இராணுவத்திற்காக அவர் ஆற்றிய சேவை பாராட்டப்பட்டது.
இலங்கை பீரங்கி படையின் சிரேஸட் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் படையின் அதிகாரிகள் உணவகத்தில் சிறப்பு இராபோசணத்தில் கலந்து கொண்டனர். bridge media | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!