Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd February 2021 23:07:03 Hours

68 வது படைப்பிரிவின் புதிய தளபதி அலுவலக கடமைகளை ஆரம்பித்தார்

முல்லைத்தீவு கோம்பாவில் பகுதியில் அமைந்துள்ள 68 வது படைப்பிரிவின் 11 வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் கீர்த்தி பண்டார சனிக்கிழமை (20) இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய தனது அலுவலக கடமைகளை ஆரம்பித்தார்.

இதன்போது, அலுவலகத்துக்கு வருகைத் தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதன் பின்னர் கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.

பின்னர் 68 வது படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழு படம் எடுத்துக்கொண்ட அவர் தனது பதவியேற்பின் நினைவாக தலைமையக வளாகத்துக்குள் மரக்கன்று ஒன்றை நாட்டிவைத்த பின்னர் படையினருக்கு படைப்பிரிவின் பணிகள் அவற்றை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் என்பவை தொடர்பில் உரை நிகழ்த்தியதையடுத்து, அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் படைப்பிரிவின் பதவி நிலை அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அலகுகளின் சில சிப்பாய்களும் கலந்துகொண்டனர். bridgemedia | シューズ