23rd February 2021 23:09:03 Hours
மின்னேரிய இலேசாயுத காலாட் படை பயிற்சித் நிலையத்தின் 40 வது தளபதியாக பிரிகேடியர் கல்ப சஞ்ஜீவ மத அனுட்டானங்களுக்கு மத்தியில் புதிய அலுவலக கடமைகளை செவ்வாய்க்கிழமை (27) பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய தளபதி காலாட் படையின் பயிற்சித் நிலையத்திற்கு வருகை தந்தபோது அவரை பதவி நிலை அதிகாரிகள் வரவேற்றதுடன் மற்றும் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அதனையடுத்து கடமைகளை பொறுப்பேற்றதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கைசாத்திட்ட பிரிகேடியர் கல்ப சஞ்ஜீவ பயிற்சி நிலைய வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டிவைத்தார்.
பின்னர் அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட தளபதி சகலருடன் தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டதுடன், இந்நிகழ்வில் கட்டளை அதிகாரிகளும் பதவி நிலை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் கல்ப சஞ்ஜீவ, சீனாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளராக சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Running Sneakers | Sneakers