24th February 2021 09:49:06 Hours
பாகிஸ்தான் கௌரவ பிரதமர் இம்ரான் கான் அவர்களின் இலங்கைக்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கொழும்பு 3 அலரி மாளிகையின் விருந்து மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை ( 23) இராபோசணம் இடம்பெற்றது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பிரதமர்கள், இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஆகியோர் தலைமை மேசையில் விருந்துண்டனர். விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதம மந்திரியுடனான விருந்தில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் வான்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மற்றும் சில அழைப்பாளர்களுடன் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடனம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் நிகழ்வு வண்ணமயமாகியது. சுருக்கமான உரைகள் மற்றும் நல்லெண்ண பாராட்டுக்கள் பரிமாற்றம் ஆகியனவும் நிகழ்வை அலங்கரித்தன. latest Running | Men's Footwear