23rd February 2021 23:23:44 Hours
கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 16 வது தளபதியாக மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க 2021 பெப்ரவரி மாதம் 20 ம் திகதி கடமை ஏற்றுக்கொண்டார்.
இராணுவ சம்பிரதாயங்ளுக்கு அமைவாக , 8 வது இலங்கை பீரங்கி படையின் படையினர் புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை என்பன வழங்கப்பட்டன.
பௌத்த தேரர்களின் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதியாக கடமையேற்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர் தளபதி தலைமையக வளாகத்திற்குள் மரக்கன்று ஒன்றினை நாட்டிவைத்துடன் தனது கட்டளையின் கீழுள்ள அமைப்புக்களின் தளபதிகள் மற்றும் பணியாளர்களுடன் குழு படம் ஒன்றினையும் எடுத்துக்கொண்டார்.
பின்னர் படையினருக்கு உரையாற்றுகையில் அர்ப்பணிப்புடன் நியமிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதன் முக்கியத்துவத்தையும், இந்த பெருமைமிக்க அமைப்பின் வீரர்களாக தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதையும் அனைத்து மட்டங்களிலும் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதன் மூலம் இராணுவத்தின் நன்மதிப்பை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார், மேலும் அனைவரையும் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக கடமைகளை திறமையாக செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வின் போது படைப்பிரிவு தளபதிகள், முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர். Mysneakers | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta