Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd February 2021 23:13:03 Hours

21 வது படைப்பிரிவு ஒருங்கிணைப்பில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் விநியோகம்

21வது படைப்பிரின் படையினரின் ஒருங்கிணைப்பில் இரண்டு நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட பாடசாலை உபகரணங்கள் மற்றும் அப்பியாச புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை (16) வவுனியா குடாகச்சகுடிய மற்றும் மூன்றுமுறிப்பு ஆரம்ப பாடசாலைகளின் 70 ஏழை மாணவர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது.

21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேயின் வழிக்காட்டலில் டாக்டர் ரம்யா சில்வா மற்றும் திரு சரத் எதிரிசிங்க ஆகியோரால் ஸ்ரீ பங்கனந்தா விஹாரயையின் வணக்கத்திற்குரிய லிந்தவெல அமராஜோதி தேரர் மற்றும் 2வது (தொண்டர்) விஜயபாகு காலாட் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் எஸ்.எம்.எஸ். பண்டார ஆகியோரின் ஒருங்கிணைப்பில் பெற்றுக்கொள்ளப்பட்டது.

பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்துக்கொண்டதுடன் 211 வது பிரிகேட்டின் தளபதி கர்னல் ஜே கே ஆர் ஜயகோடி, 2வது (தொண்டர்) விஜயபாகு காலாட் படையின் கட்டளை அதிகாரி இரு பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் பகிர்ந்தளிப்பு நிகழ்வில் கலந்துக்கொண்டனர். affiliate link trace | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092