23rd February 2021 15:34:14 Hours
தேசிய சுதந்திர தினத்தன்று (பெப்ரவரி 4), லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் பாதுகாப்பு படை குழுவின் தளபதி லெப்டினன்ட் கேணல் சுஜீவ பட்டகல படைக் குழுவின் இடைத் தங்கள் முகாமில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தேசிய கீதம் பாடப்பட்டதுடன் அங்கு உயிர் நீத்த போர்வீரர்களை நினைவு கூர்ந்து 2 நிமிட மௌனஞ்சலி செலுத்தப்பட்டது. 73 வது சுதந்திர தின விழாவிக்கான இராணுவத் தளபதியின் விஷேட செய்தியும் வாசிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் பிரதி படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அயிட்டி ஆர்யீட்டி காலை 10.00 மணிக்கு இலங்கை பாதுகாப்பு படை குழு முகாமிற்கு விஜயம் செய்தார். அங்கு அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் இலங்கை சுதந்திர தினத்தையொட்டி நிலை உயர்வு பெற்ற மேஜர் சாகர பீரிஸ் அவர்களுக்கு நிலைக்குரிய சின்னம் பிரதி படைத் தளபதியினால் அணிவிக்கப்பட்டது.
பின்னர் படையினருக்கு உரையாற்றிய பிரதி படைத் தளபதி படையினரின் கடமைகளைச் செய்யும் போது அவர்களின் விசுவாசம் மற்றும் தொழிலாண்மை ஆகியவற்றைப் பாராட்டினார். இதன் போது அதிகாரி கட்டளை அவர்களினால் பிரதி படைத் தளபதிக்கு அவரது வருகையைப் பாராட்டும் அடையாளமாக ஒரு நினைவு பரிசை வழங்கினார்.
அதேவேளையில் தென் சூடானில் உள்ள இராணுவ படையினர் நிர்வகிக்கும் சிறிமேட் கட்டம் 2 வைத்தியசாலையின் படையினர் 2021 பெப்ரவரி 4 ம் திகதி 73 வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி ஐநா அமைதி காக்கும் படை முகாமின் பொது இடங்களில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.
இலங்கை விமான போக்குவரத்து நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் தந்திர தினத்தன்று மரம் நடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டது. best shoes | Men's Sneakers