Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2021 18:30:21 Hours

நகரவெவ மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

வி.எஸ். இன்போர்மேஷன் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் அனுசரனையில் ஹம்பாந்தோட்டை நகரவெவ பகுதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மாணவர்களுக்கு தேவையான ஒரு தொகுதி பாடசாலை பைகள், காலணிகள், புத்தகங்கள் மற்றும் பிற கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள 12 வது படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில் சனிக்கிழமை (20) இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் படையினர் பங்கேற்றனர்.

இது தொடர்பான ஏற்பாடுகளை செய்யுமாறு 12வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க தனது படையினருக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. bridge media | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD