Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2021 20:27:21 Hours

வெளிச்செல்லும் முல்லைத்தீவு தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை

முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 13 வது தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்கள் பெப்ரவரி 20ம் திகதி படையினரால் வழியனுப்பி வைக்கப்பட்டார்.

19 கெமுனு ஹேவா படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் 7 வது கெமுனு ஹேவா படையினர் இராணுவ முறைகளுக்கு இணங்க அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் வெளியேறும் தளபதி படையினருக்காக புதிதாக அமைக்கப்பட்ட கூடை பந்து மைதானத்தை திறந்து வைத்தது உரையாற்றுகையில் தனது பதவிக் காலத்தில் அளித்த ஆதரவுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

உரையின் முடிவில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி அவர்களால் தளபதிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி, படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நிகழ்வில் கலந்து கொண்டனர். Running sport media | Sneakers Nike Shoes