22nd February 2021 12:47:57 Hours
இலங்கை பீரங்கி படையின் புதிதாக மேஜர் ஜெனரல்களாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர மற்றும் மேஜர் ஜெனரல் அஜித் கோலம்பதந்திரி ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை (21) பனாகொடை படைத் தலைமையகத்தில் கௌரவிக்கப்பட்டனர்.
பாரம்பரிய நிகழ்வைக் கொண்டு முதலில், அவர்களுக்கு படைத் தலைமைதைதிலன் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அதன்பிறகு, பீரங்கி படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடை அவர்கள் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து அனைத்து அதிகாரிகள் மற்றும் படையின் சிப்பாய்கள் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து அனைத்து அதிகாரிகளும் புதிய மேஜர் ஜெனரல்களுடன் ஒரு குழு படத்தினை எடுத்துக் கொண்டனர். அன்றைய நடவடிக்கைகள் 6 வது இலங்கை பீரங்கி படை முகாமில் இடம்பெற்ற அனைத்து நிலைகளுக்கான மதிய உணவுடன் நிறைவுபெற்றது. Sports Shoes | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp