22nd February 2021 14:19:02 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக கடந்த ஆறு மாதங்கள் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட இலங்கை இராணுவ தொண்டர் படை தளபதியாக பதவியேற்பதற்காக சனிக்கிழமை (20) தனது பதவியை கைவிட்டார்.
இராணுவ மரபுகளுக்கு ஏற்ப பாதுகாப்பு படை தலைமையத்தின் கீழ் நிலைக் கொண்டுள்ள 8 வது இலங்கை பீரங்கி படைப் படையினரால் பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பு என்பன வழங்கப்பட்டன.
அதன்பிறகு, வெளியேறும் தளபதி பதவியைக் கைவிடுவதைக் குறிக்கும் ஆவணத்தில் கையொப்பமிட்டதுடன் தனது கட்டளையின் கீழ் உள்ள அமைப்புக்களின் தளபதிகள் மற்றும் பதவி நிலை அதிகாரிகளுடன் குழு படத்தையும் எடுத்துக்கொண்டார்.
பின்னர் அவர் நெலும்பியச கேட்போர் கூடத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றுகையில் தனது பதவிக்காலத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் வழங்கப்பட்ட சிறந்த சேவையையும் ஆதரவையும் பாராட்டியதோடு எதிர்காலத்திலும் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர், நவீன வசதிகளுடனான அறைகள், குளிர்பான கடை மற்றும் கடைகள் கொண்ட நவீனமயமாக்கப்பட்ட புதிய நலன்புரி கட்டிட தொகுதியினை பெயர் பலகை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார். பின்னர், தளபதி ஒவ்வொரு பிரிவின் அதிகாரிகளுடனும் நவீன வசதிகள் குறித்து கலந்துரையாடினார். . latest jordan Sneakers | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News