22nd February 2021 13:47:57 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவின் 18வது தளபதியாக பிரிகேடியர் டீ.ஜீ.சூரியபண்டார மத ஆசிர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது படைப்பிரிவின் புதிய தளபதிக்கு, படைப்பிரிவினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடனான வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர் பிரிகேடியர் ஜி.டி.சூரியபண்டார தனது கடமைகளை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கை யொப்பமிட்டதுடன் அனைத்து நிலையினருக்கான தேனீர் விருந்தில் கலந்துக் கொள்ளுவதற்கு முன்பதாக நிகழ்வின் ஞாபகார்த்தமாக படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்று ஒன்றிணையும் நாட்டி வைத்தார்.
அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான தனது முதல் உரையின் போது தனது எதிர்கால திட்டங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்தார். பிரிகேட் தளபதிகள், பதவி நிலை அதிகாரிகள் , கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். best Running shoes | New Balance 991 Footwear