22nd February 2021 14:06:04 Hours
கந்தபொட பவுன்செத் மனசிக சேவன விபாசன பாவனா எனும் தியான நிலையத்தில் இராணுவ படையினரால் நிர்மானிக்கப்பட்ட 'சுதீர குட்டிய' எனும் தியான மண்டபம் அதன் தலைமை தேரர் வணக்கத்திற்குரிய தியசென்புர விமல தேரர் அவர்களின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதியும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவருமான ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க மற்றும் சில அழைப்பாளர்களின் பங்கு பற்றலில் ஞாயிற்றுக்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது.
நன்கொடையாளர்களின் நிதி அனுசரணையுடன் இராணுவத்தின் 15 வது பொறியியலாளர் சேவைப் படையினர் பவுன்செத் மனசிக சேவன விபாசன பாவனா நிலையத்தின் மேலதிய தியான பயிற்சியாளர்களுக்கு இடவசதியை பெற்றுக் கொடுக்கும் வகையில் இம் மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மத சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பௌத்த தேரர்களின் ஆர்வாதங்கள் மற்றும் செத் பிரித பாராயணங்களுக்கு மத்தியில் ஜெனரல் சவேந்திர சில்வா கௌரவ அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க ஆகியோர் நாடா வெட்டி புதிய மண்டபத்தை திறந்துவைத்தனர். ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் புனித வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர். பின்னர் புத்த பூஜையில் பங்கு கொண்டனர்.
கந்தபொட தியான நிலையம் இன்றுவரை 30,000 க்கும் மேற்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸருக்கான தியான பயிற்சி அமர்வுகளை நடத்தியுள்ளது. இந்த முயற்சியை இராணுவம் மற்றும் அதன் உளவியல் இயக்க பணிப்பகம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருந்தது.
கெளரவ அமைச்சர் சிசிர ஜயகொடி, இராணுவ அதிகாரிகள், நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். bridgemedia | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ