22nd February 2021 10:27:22 Hours
கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேசத்தின் 2வது இலங்கை இராணுவ பொலிஸ் படைக்கு 'சிஹாஸ்' அறக்கட்டளையின் நிதியுதவியுடன் கிடைக்கப்பெற்ற போட்டோ கொப்பி இயந்திரம் கணினி, கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க பொலன்னருவ மதுதமன மாதிரி ஆரம்ப பாடசாலைக்கு சனிக்கிழமை (20) வழங்கப்பட்டது.
2வது இராணுவ பொலிஸ் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஆர்.விதனராச்சி அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக 'சிஹாஸ்' அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு சாலிந்த நிரோசன் விஜேசிங்க அவர்கள் இந்த உதவியை வழங்கினார்.
இந் நிகழ்வில் 2வது இராணுவ பொலிஸ் படையின் அதிகாரிகள், சிப்பாய்கள், 'சிஹாஸ்' அறக்கட்டளையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். bridge media | Nike Air Max 270