22nd February 2021 11:09:35 Hours
இந்து பௌத்த கலாசார சங்கத்தின் செயலாளர் திரு. எம்.டி.பி ராமச்சந்திரன், உதவி செயலாளர் திரு என்.தவராஜா மற்றும் அமைப்பின் சில அதிகாரிகள் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவை பாதுகாப்பு படை தலைமையக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (19) சந்தித்தனர்.
கூட்டத்தில் யாழ்ப்பாண இந்து பௌத்த கலாசார சங்கத்தின் அதிகாரிகள், தங்கள் அமைப்பு நீண்ட காலமாக மொழி பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதாகவும், அந்த படிப்புகள் காரணமாக யாழ்ப்பாண தீபகற்பத்தில் 21,000 க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இரண்டு முக்கிய சமூகங்களுக்கிடையிலான மொழி இடைவெளியைக் குறைப்பதற்கான அவர்களின் முயற்சிகளைத் தொடர தனது சங்கம் உறுதியாக இருப்பதாக திரு ராமச்சந்திரன் கூறினார்; சிங்களவர்களும் தமிழர்களும் தங்கள் மொழிகளை மேலும் பரப்புவதன் மூலம் நல்லிணக்கம் மற்றும் சிறந்த புரிதலை ஏற்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இறுதியாக, யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி நாட்டின் சகவாழ்வுக்காக யாழ்ப்பாண இந்து பௌத்த கலாசார சங்கத்தின் மதிப்புமிக்க பங்களிப்பைப் பாராட்டியதுடன், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எந்த உதவியையும் வழங்குவதற்காக தயாராக இருப்பதாக உறுதியளித்தார். Sportswear Design | adidas Campus 80s South Park Towelie - GZ9177