Header

Sri Lanka Army

Defender of the Nation

20th February 2021 09:00:15 Hours

சுவிஸ் தூதுவர் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியை சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான சுவிஸ் தூதுவர் அதிமேதகு டொமினிக் பர்க்லர் அவர்கள் யாழ் குடா நாட்டிற்கு (18) வியாழக்கிழமை ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட போது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது யாழ் குடாநாட்டில் சிவில் மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பு திட்டங்கள் மற்றும் புனரமைப்பு செயல்முறை, தொடர்பாகவும் தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களாக இணத்துக் கொள்வது, கலாச்சார உறவுகளை மேம்படுத்துதல், ஏழைகள் மற்றும் பாடசாலை சிறார்களின் பிரச்சினைகள், வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பாக தளபதியால் விளக்கமளிக்கப்பட்டது.

சுவிஸ் தூதுவர் அவர்களும் அரசியல் விவகார செயலாளர் சிடோனியா கேப்ரியல் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு திட்டங்கள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தனர், மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இந்த கலந்துரையாடலின் போது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பதவி நிலை மற்றும் பதவி நிலை அதிகாரி 1 (செயல்பாடுகள் மற்றும் பயிற்சி) ஆகியாரும் கலந்து கொண்டனர். Sport media | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals