Header

Sri Lanka Army

Defender of the Nation

20th February 2021 10:00:15 Hours

இராணுவ பொலிஸ் படையின் வீரமகனுக்கு தளபதியின் வீட்டுதிட்டத்தின் கீழ் புதிய வீடு

இராணுவ தலைமையகத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி இலங்கை இராணுவ பொலிஸ் படையின் மாற்றுத் திறனாளி படை வீரர் ஒருவருக்கு மஹோ பகுதியில் கட்டப்பட்ட புதிய வீடு வியாழக்கிழமை (18) உத்தியோக பூர்வமாக பணனாளிக்கு வழங்கப்பட்டது.

இராணுவ தலைமையக முன்னாள் படைவீரர் விவகார பணிப்பகம் மற்றும் முதலாவது இலங்கை இராணுவ பொலிஸ் படை ஆகியவற்றின் நிதியுதவியில் 1.4 மில்லியன் ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் இராணுவ உறுப்பினர்களில் வீடற்றவர்களுக்கு வீட்டுவசதிகளை பெற்றுக் கொடுக்கும் வீட்டுத் திட்டத்திற்கு அமைவாக இந்த வீடு கட்டப்பட்டது.

இராணுவ வழங்கல் பிலிவின் தளபதியும் இலங்கை இராணுவ பொலிஸ் படையின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்த வீடு முதலாவது இராணுவ பொலிஸ் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் நிலந்த ரத்நாயக்கவின் மேற்பார்வையில் கட்டப்பட்டது.

அவர்கள் அனைவருக்கும் வசதியான வாழ்வாதாரத்தை எளிதாக்கும் நோக்கத்துடன் அத்தியாவசிய வீட்டு உபகரணங்கள், மின் உபகரணங்கள் மற்றும் ஒரு தொகை தளபாடங்கள் ஆகியவை பயனாளிக்கு பரிசாக வழங்கப்பட்டன. மத அனுஸ்டானங்கள் பெயர் பலகை திறப்பு பால் பொங்கல் என்பனவற்றுடன் புதிய வீடு பயனாளிக்கு வழங்கப்பட்டது.

பொலிஸ் படை பணிப்பாளர், நிலையத் தளபதி , இராணுவ பொலிஸ் படையின் சிரேஸ்ட அதிகாரிகள், பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் சிலரும் கலந்து கொண்டனர். latest Running | Air Jordan