19th February 2021 12:30:51 Hours
பிரிகேடியர் துமிந்த ஜெயசிங்க திங்களன்று (15) பூ-ஓயா கள பொறியியலாளர் பிரிகேடின் 19 வது தளபதியாக தனது கடமைகளைத் தொடங்கினார்.
படைப்பிரிவு தலைமையகத்திற்கு வந்த புதிய தளபதிக்கு பாரம்பரிய இராணுவ காவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், புதிய தளபதி பிரிகேடியர் துமிந்த ஜெயசிங்க மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் ஒரு உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு புதிய கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
அதன்பிறகு, அவர் பிரிகேட் வளாகத்தில் மா மரக்கன்றினை நட்டார். அதனைத் தொடர்ந்து பிரிகேட் பதவி நிலை அதிகாரிகள் தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் மற்றும் பிற செயல்பாடுகள் குறித்த முறையான விளக்கத்தை அவருக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் 8, 9 மற்றும் 10 வது கள பொறியியலாளர் படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் கள பொறியியலாளர் பிரிகேடின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். Sports brands | Nike for Men