20th February 2021 11:21:15 Hours
படை வீரர்கள் விவகார பணிப்பகம் மற்றும் பொறியியல் சேவைகள் படைப்பிரிவு இணைந்து பிலியந்தலையில் வசிக்கும் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த மற்றொரு ஆணைபெறாத அதிகாரியின் குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடானது கடந்த வெள்ளிக்கிழமை (19) திறந்துவைக்கப்பட்டது.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் எண்ணக்கருவின் கீழ் , நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கு மற்றும் போரில் காயமடைந்த இலங்கை பொறியியல் சேவைகள் படைப்பிரிவின் படையினரால் படை வீரர்கள் விவகார பணிப்பகத்தின் நிதி உதவியுடன் மேற்கொள்ளபடுகின்றது.
முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச படைத் தளபதியும்பொறியியலாளர்கள் சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரத்னசிறி கணேகொட அவர்களின் வழிகாட்டுதலில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு ரூ .1.5 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்டது.
பொறியியல் சேவைகள் படைப்பிரிவின் தளபதியை பரதிநிதித்துவப்படுத்தி அப்படையணியின் நிலையத் தளபதி கேணல் வைகே ரங்கிகாவின் அழைப்பின் பேரில், கேணல் குமார விஜேநாயக்க தலைமை விருந்தினராக கலந்துகொண்டு அவ்வீட்டினை திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் மூத்த அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பயனாளியின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.Adidas footwear | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp