19th February 2021 16:02:47 Hours
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் 'இலங்கை இராணுவத்தின் மூலோபாய திட்டங்கள் 2020-2020' க்கு அமைவாக தியதலாவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தொண்டர் படை பயிற்சி கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்துதல் நிமித்தம் அதிகாரிகளின் கற்றல் மையம் ‘Wisdom Avenue’ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான ‘Green View’ கட்டிடம் ஆகியன கடந்த புதன்கிழமை (17) ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டன.
அதிகாரிகளின் கற்றல் மையமானது மூன்று ஸ்மாட் வகுப்பறைகளை உள்ளடக்கிதோடு அங்கு 100 மாணவ அதிகாரிகளுக்கான அமர்வு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்விற்கு இலங்கை இராணுவ தொண்டர் பயிற்சி கல்லூரியின் நிலையத் தளபதி கேர்ணல் எச்.ஏ கீர்திநாத அவர்களின் அழைப்பை ஏற்று அப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த கட்டிடங்களை திறந்து தைத்துடன் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இப் பயிற்சிப் கல்லூரியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரையின் பேரில் இந்த மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
117 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட தியதலாவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தொண்டர் படை பயிற்ச்சி கல்லூரியின் தேசபக்தி மற்றும் தொழில்முறை அதிகாரிகளைக் கொண்ட நாட்டின் முன்னணியில் உள்ள கல்லூரிகளில் ஒன்றாகும். தற்போது, இது நவீன வசதிகளுடன் அவர்களின் பயிற்சியை மேலும் மேம்படுத்தி கொள்ளும் வகையில் பயிற்சி கல்லூரியாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் 'இலங்கை இராணுவ வழி முன்னோக்கு மூலோபாயம் 2020 - 2025' இன் கீழ் உள்ள திறன்கள், இப்போது இராணுவ தலைமையகத்தின் அறிவுறுத்தலின் படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியவர்கள் அப்படையின் பிரதி நிலையத் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டி ஜயசிங்க மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படை பயிற்சி கல்லூரியின் பிரதி தளபதி கேர்னல் எச்.ஏ. கீர்த்திரத்ன ஆகியோரினால் வரவேற்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பிரதம அதிதி அவர்கள் மகா சங்கத்தினரின் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றப்பட்டதனை தொடர்ந்து 10 அறைகளை உள்ளடக்கிய ‘Wisdom Avenue’ அதிகாரிகள் கற்றல் மையம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் தங்குமிடம் வளாகம் ஆகிய கட்டிடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து பிரதம அதிதியால் ‘நா’ மரக்கன்றும் நடவு செய்யப்பட்டன.
பிரதம அதிதியவர்கள் தனது உரையில், 2020 - 2025 இலங்கை முன்னோக்கி மூலோபாயத்தின் ஒரு கட்டமாக இலங்கை இராணுவ தொண்டர் படை பயிற்ச்சி கல்லூரியின் எதிர்கால மேம்பாட்டு மூலோபாயம் தொடர்பாக குறிப்பிட்டார்.
மேலும், இராணுவத் தளபதியின் 2020 - 2025 இலங்கை முன்னோக்கி மூலோபாய செயற்பாடுகள் பங்கு மற்றும் பணிகள் மற்றும் கட்டமைப்பு மேம்பாடு, திறன் மேம்பாடு, தொழில் வளர்ச்சி மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு ஒத்துழைக்கும் முகமாக பயிற்சி முறைகள் கருத்துக்கள் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் வழியுறுத்தினார்.
நிகழ்வின் இறுதியில் பயிற்சி கல்லூரியின் தளபதி பிரதம அதிதிக்கு நினைவு சின்னமும் வழங்கினார். பயிற்சி கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, சிறப்பு அதிதகள் புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார். இந் நிகழ்வானது சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப இராணுவ அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.Nike Sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE