18th February 2021 20:00:33 Hours
ஓய்வு பெற்று செல்லும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்கள், படைப் பிரிவுகளுக்கு கடந்த 16-18 ஆம் திகதிகளில் தனது உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
அதன்படி முதல் கட்டமாக, அவர் செவ்வாய்க்கிழமை (16) ஆம் திகதி 59 ஆவது படைப் பிரிவுக்கு விஜயம் செய்தார் அவரை 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் லமஹேவா அவர்களால் வரவேற்கப்பட்டார். பின்னர் அவர் படையினர்களுக்கு உரையாற்றியதுடன் படைப் பிரிவின் வளாகத்தில் மரக்கன்றும் நட்டுவைத்தார். பின்னர் அவருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்ட்டது.
அவர் புதன்கிழமை (17) ஆம் திகதி 64 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தை பார்வையிட்டார், அங்கு 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்ன அவர்களால் வரவேற்கப்பட்டார். பின்னர் படையினர் மத்தியல் அவர் உரையாற்றியதுடன், நினைவு சின்னம் வழங்கும் முன் படைப் பிரிவு வளாகத்தில் மரக் கன்று ஒன்றையும் நட்டுவைத்தார்.
அதைத் தொடர்ந்து, பெப்ரவரி 18 ஆம் திகதி 68 ஆவது படைப் பிரிவுக்கு விஜயத்தை மேற்கொண்டார் அவர் 68 ஆவது படைப் பிரிவு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ மற்றும் படையினர்களை சந்தித்து உரையாற்றினார். நினைவு சின்னம் வழங்கப்படுவதற்கு முன்பு விஜயத்தின் நினைவாக வளாகத்தில் ஒரு மரக்கன்றயும் நட்டுவைத்தார். best Running shoes | Nike