19th February 2021 12:08:51 Hours
முல்லைத்தீவு இராணுவ வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு (OPD) மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கடந்த திங்கட்கிழமை (15) ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு இராணுவ வைத்தியசாலையில் கட்டளை அதிகாரி கெப்டன் கே.எஸ்.எஸ் கோரலகே அவர்களின் அழைப்பை ஏற்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் கலந்துகொண்டார்.
இராணுவத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் முல்லைத்தீவு படையினர்களின் உதவியுடன் வைத்திசாலையின் வளாகத்தில் இப் புதிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வினை நினைவுபடுத்தும் முகமாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்களால் மருத்துவமனை வளாகத்தில் ஒரு மா மரக்கன்று நடப்பட்டது.
இதன் பேது முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரத்னசிறி கனேகொட உட்பட அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்துகொண்டனர். best Running shoes brand | Air Jordan