Header

Sri Lanka Army

Defender of the Nation

19th February 2021 14:57:48 Hours

இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பில் புலேலியாவில் சமுக நலத்திட்டம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் விஹாரைகளில் உள்ள துறவிகள்,தேவையுடைய கிராமவாசிகள், அனாதை இல்லங்களில் வசிப்பவர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய கிராமவாசிகளின் நலனுக்காக ஒரு சமூக நலத்திட்டம் புலேலிய பிரதேசத்தின் கிரலகல விஹாரையில் புதன்கிழமை (17) ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த திட்டத்திற்கான முழு பங்களிப்பும் அஸ்கிரிய பீடத்தின் பிரதி பதிவாளரும் மற்றும் அஸ்கிரிய மகா பிரிவேனாவின் பரிவேநாதிபதியுமான வென் நாரம்பனவே ஆனந்த நாயக்க அவர்களால் வழங்கப்பட்டது.

இதில் 10 விஹாரைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள், 97 ஏழைக் குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய வீட்டுப் பொருட்கள், 181 அறநெறி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், நேரியகுளம் செல்வடோரியன் சிறுவர் நிலையத்தின் சிறார்களுக்கு புத்தகம், எழுதுபொருள்கள், உலர் உணவுகள், தளபாடங்கள் மற்றும் எழுதுபொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

அஸ்கிரியவில் மறைந்த அனுநாயக்க தேரர் மற்றும் முத்தியங்கன ரஜமஹா விஹாரையின் முன்னாள் தலைவர் பதவியில் இருந்த வணக்கத்திற்குரிய ஹலியால ஸ்ரீ சுமனதிஸ்ஸ நாயக்க தேரர் ஆகியோரின் 33 ஆவது இறப்பு தினத்தை நினைவுகூரும் வகையில் ஆனந்த நாயக தேரர் அவரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.

இந்த திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி விக்கும் லியனகே அவர்களின் ஆதரவுடன், 213 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரசிக குமார அவர்களின் மேற்பார்வையில், 5 ஆவது (தொண்டர்) காலாட்படையணியின் படையினரால் மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் பூகொடையில் அமைந்துள்ள 5 ஆவது (தொண்டர்) காலாட் படையணி பட்டாலியன் பயிற்சிப் பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர், 5 ஆவது (தொண்டர்) காலாட்படையணியின் கட்டளை அதிகாரி, 513 ஆவது படைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஏனைய ப்பாய்களும் கலந்து கொண்டனர். Nike sneakers | Air Jordan 5 Raging Bull Toro Bravo 2021 DD0587-600 Release Date - SBD