Header

Sri Lanka Army

Defender of the Nation

18th February 2021 21:00:33 Hours

தலைமை கள பொறியியலாளர் பூ-ஓயாவிற்கு விஜயம்

இலங்கை பொறியியலாளர் படையணியின் படைத் தளபதி மற்றும் தலைமை கள பொறியியலாளரான மேஜர் ஜெனரல் நிகால் அமரசேகர அவர்கள், வவுனியா பூ ஓயாவில் உள்ள பொறியியற்லாளர் பிரிகேட் பிரிவுகளுக்கு பெப்பரவரி 14 ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இப் படைப் பிரிவுக்கு வருகை தந்த படைத் தளபதியை அந்த கள பொறியியலாளர்கள் பிரிகேட்டின் தளபதி வரவேற்றார், பின்னர் புதிதாக கட்டப்பட்ட பாதுகாப்பு சுவரால் அலங்கரிக்கப்பட்ட சிலை மற்றும் போதிக்கு மலர்கள் வைக்க அழைக்கப்பட்டார்.

பின்னர் அவர் புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்தையும், புதிய ரக்பி அரங்கத்தையும் அவர் திறந்துவைத்தார். இறுதியாக, அவர் படையினர் மத்தியில் உரையாற்றுகையில், அனைத்து படையினருக்குமுள்ள பொறுப்புகளையும் அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் விரிவாகக் கூறினார். Sportswear free shipping | Nike