18th February 2021 22:48:33 Hours
கிளிநொச்சி பாதுபாப்பு படைப் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்ளின் எண்ணக்கருவின் கீழ் கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் நானாயகரவாசம் அவர்களின் வழிகாட்டுதலில் , 2021 ஆம் ஆண்டில் க.பொ.த. பரிட்சையில் தோற்ற இருக்கும் இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மொத்தம் 350 மாணவர்களுக்கு விழிப்புனர்வு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
இந்த பட்டறை 2021 பெப்ரவரி 16 ஆம் திகதி கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி மஹா வித்யாலய ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றன.
கொழும்பு டம்ரிவி அறக்கட்டளையின் வேலைவாய்ப்பு திட்டத்தின் தலைவர் தேசிய கல்வி சபையின் சுயாதீன் உறுப்பினர் திரு தர்ஷன நிரஞ்சன் மடவல மற்றும் தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மகாரகமயில் உள்ள தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றின் விரிவுரையாளர் திரு முகமது அஹமட் இப்திகர் ஆகியோர்களால் இரு பட்டறைகளும் நடாத்தப்பட்டன.
இந்த பட்டறையின் நோக்கம், தளர்வு நுட்பங்களைப் பயன்படுத்தி பரீட்சை அழுத்தத்தை எவ்வாறு திறம்பட சமாளிப்பது என்பது குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதாகும், இது அவர்களின் உளவியல் சமூக நலனை அதிகரிக்கும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
பட்டறைகளின் முடிவில், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேர்ந்து இந்த முயற்சிக்கு இராணுவத்திற்கு நன்றி தெரிவித்தனர். latest jordans | Nike Shoes