19th February 2021 11:30:51 Hours
இன்று (20) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 517 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அவர்களில் 11 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஏனைய 506 பேர் உள் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 152 பேர் கொழும்பு மாவட்டம், 111 பேர் கம்பஹா மாவட்டம், 57 பேர் கண்டி மாவட்டம், ஏனைய மாவட்டங்களில் 186 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி (20) ஆம் திகதி காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக மரணித்தவர்கள் உட்பட 78,936 தொற்றுள்ளவர்கள் இணங்கானப்படுள்ளதுடன் அவர்களில் 78,936 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி மற்றும் மினுவான்கொடை ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களாவர். 72,565 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 5,941 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 743 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான 03 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் மாத்தளை, நுகேகொட மற்றும் கலகெடிஹேன பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி (20) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 433 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், (20) காலை நிலவரப்படி முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 93 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,941 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (19) 15,554 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Nike air jordan Sneakers | Air Jordan Release Dates 2020