Header

Sri Lanka Army

Defender of the Nation

16th February 2021 13:22:38 Hours

மேலும் 13 கொரோனா மரணங்கள் பதிவு

இன்று (18) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 722 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அவர்களில் 09 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஏனைய 713 பேர் உள் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 223 பேர் கொழும்பு மாவட்டம், 160 பேர் கம்பஹா மாவட்டம், 49 பேர் கண்டி மாவட்டம்,ஏனைய மாவட்டங்களில் 281 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி (18) ஆம் திகதி காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக மரணித்தவர்கள் உட்பட 77,905 தொற்றுள்ளவர்கள் இணங்கானப்படுள்ளதுடன் அவர்களில் 74,375 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி மற்றும் மினுவான்கொடை ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களாவர். 71,175 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6,308 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 747 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான 13 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் வேவுட ,களுத்துறை வடக்கு, மக்கோண, களுத்துறை ,பொம்புவல, நேபொட, நுவரெலியா, அக்கரப்பத்தன, கம்பளை,பேலியக்கொடை பாணந்துறை மற்றும் நுகெகொடை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி (18) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்தஎண்ணிக்கை 422 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், (18) காலை நிலவரப்படி முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 92 தனிமைப்படுத்தல் மையங்களில் 9,089 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (17) 13,585 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Mysneakers | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret