16th February 2021 12:00:38 Hours
இலங்கை பீரங்கி படையின் படைத் தளபதியும் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட கந்தளாய் சீனிபுர 5 (தொ) வது இலங்கை பீரங்கி படைக்கு செவ்வாய்க்கிழமை (16) தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்.
படைத் தளபதியை 5 (தொ) பிரங்கி படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் எல்.டபிள்யூ.பி ரிதிமஹாலியத்த வரவேற்றதன் பின்னர் பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் அவர் மறைந்த போர்வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் மலர் அஞ்சலி செலுத்தியதன் பின்னர் முகாம் வளாகத்தில் மரக்கன்றினை நாட்டி வைத்தார். பின்னர் இடம்பெற்ற அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு படைத் தளபதியுடன் கருத்து பரிமாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டியது. பின்னர் 5 (தொ) பிரங்கி படையின் கட்டளை அதிகாரி கடமைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார், அதைத் தொடர்ந்து தளபதி முகாமினை சுற்றி பார்வையிட்டார்.
இறுதியில் விருந்தினர் பதிவேட்டில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.
அதேவேளை மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட வியாழக்கிழமை (11) பலாலி வயாவிளான் 10வது இலங்கை பீரங்கி படைக்கு விஜயம் செய்தார்.
படைத் தளபதியை 10 வது பிரங்கி படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் எல்.என்.யூ லியனராச்சி ஐ.ஜி நுழைவாயிலில் வரவேற்றதுடன் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
படைத் தளபதி படையினருக்கு உரையாற்றிய போது 10 வது பிரங்கிப் படையின் மதிப்புமிக்க பங்களிப்பைப் பாராட்டினார். பின்னர் அனைத்து நிலைகளுக்கான தேனீர் விருந்தின் போது படையினருடன் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டார்.
பின்னர் படைத் தளபதி தனது விஜயத்தினை குறிக்கும் வகையில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார். குழு படம் எடுத்துக் கொண்டதன் பின்னர் கடமைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து கட்டளை அதிகாரி விளக்கினார். இறுதியில் விருந்தின் பதிவேட்டில் தனது எண்ணங்களை பதிவிட்டார். Sport media | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1