15th February 2021 15:00:22 Hours
இயந்திரவியல் காலாட் படை தனது 14 வது ஆண்டுவிழாவை சனிக்கிழமை (13) தம்புள்ளை தம்புளுஹல்மிள்ளாவ இயந்திரவியல் காலாட் படை தலைமையகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் போது இயந்திரவியல் காலாட் படை படைத் தளபதி மேஜர் ஜெனரல் சேனா வாடுகே நுழைவாயிலுக்கு வந்ததும் பிரதி நிலையத் தளபதி கேணல் அருண ஜயசேகர அவர்கள் அன்புடன் வரவேற்றார். பின்னர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் மறைந்த போர்வீரர்களின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தல் என்பவற்றில் பங்கு கொண்டார்.
அதன்பிறகு படைத் தளபதிக்கு வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைக்கு தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கின் பிரதம நிறைவேற்று அதிகார பிரிகேடியர் சுஜித் பாலச்சந்திர மற்றும் இயந்திர காலாட் படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் குமாரா வனசிங்க ஆகியோர் அழைத்துச் சென்றனர்.
ஆண்டுவிழாவிற்கு இணையாக படைத் தளபதியினால் புதிய பிரதான வாயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. jordan release date | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival