17th February 2021 20:47:38 Hours
பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இலங்கை இலேசாயுத காலாட் படை தலைமையகம் தனது மறைந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்த போர் வீரர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் முன்னாள் படையினர் விவகார பணிப்பகம் மற்றும் இலேசாயுத காலாட் படை தலைமையகத்தின் நிதி உதவியில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் நலனோம்புத் திட்டத்துடன் முன்னெடுக்கப்படுகின்றது.
அந்ந வகையில் 8வது இலங்கை இலேசாயுத காலாட் படை படையினர் தனது மறைந்த அதிகாரவாணையற்ற அதிகாரியின் குடும்பத்திற்காக வெல்லவாய பிரதேசத்தில் படையணியின் அனைத்து படையினரின் ஒத்துழைப்பில் 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய வீட்டினை நிர்மாணித்தனர். அதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை (11) மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படை படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ அவர்களின் வழிக்காட்டலின் பேரில் மத அனுஸ்டானங்கள் பால் போங்கல் மற்றும் பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் படைத் தளபதியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8வது இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரியின் அழைப்பை ஏற்று பிரிகேடியர் சி.ரணவீர அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். மேலும் பயனாளி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர். Running sport media | Releases Nike Shoes