Header

Sri Lanka Army

Defender of the Nation

18th February 2021 19:27:36 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் மனோஜ் லமஹேவாவின் சேவைகளுக்கு பாராட்டு

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (18) காலை இலங்கை பீரங்கி படையின் சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவரும் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்திற்கு அர்ப்பணிப்பு மிக்க சேவையாற்றி இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் 59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் லமஹேவாவை அழைத்த பாராட்டினார்.

இச்சந்திப்பின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் மனோஜ் லமஹேவாவுடன் இராணுவத்தில் அவர் வகித்த முக்கிய நியமனங்கள் மற்றும் குறிப்பாக இலங்கை பீரங்கி படையில் ஆற்றிய பணிகள் தொடர்பாக நினைவு கூர்ந்தார்.

ஓய்வு பெறும் அதிகாரி தனது தளபதியின் விருப்பத்திற்கும் சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஊக்கத்தையும் நினைவுப்படுத்தினார். சந்திப்பின் முடிவில் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெறுபவருக்கு பாராட்டு மற்றும் பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு பரிசு வழங்கினார். latest Nike Sneakers | Sneakers