Header

Sri Lanka Army

Defender of the Nation

19th February 2021 11:08:51 Hours

தளபதி மறைந்த போர் வீரரின் துணிச்சலை நினைவுபடுத்தி மற்றும் நினைவஞ்சலியிலும் கலந்துக் கொண்டார்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியம் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கஜபா படையணியின் படைத் தளபதியாக 1991 ஆம் ஆண்டில் தனது விலைமதிப்பற்ற வாழ்க்கையை அர்ப்பணித்த முக்கிய போர்க்கால நண்பனை நினைவு கூறுகின்றமைக்கு இன்று (17) பிற்பகல் களுத்துறை பலத்தோட்ட தேக்கவத்தை ஆனந்த அமரசிங்க கிலன் பிக்கு விவேகாராம வளாகத்தில் நடைபெற்ற நினைவு விழாவில் கலந்து கொண்டு தனது நன்றியினை தெரிவித்தார்.

சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு 1991 பெப்ரவரி 17 அன்று இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பாடநெறி இலக்கம் 31 இன் ஊடாக கஜபா படையணி அதிகாரியான லெப்டினன்ட் பிரசன்ன அரியரத்ன நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக போராடும் போது மன்னாரில் கொண்டாச்சி சிலவத்துறையில் எல்.டி.டி.இ பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து மரணமானார். . அப்போதிருந்து அவரது பெற்றோர்கள் அவரது அடுத்த பிறப்பிற்காக ஏராளமான ஞாபகார்த்த நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

இந்த புனித வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 30 வது நினைவு விழாவில் புனித போதியை சுற்றி தங்கமுலாம் பூசப்பட்ட வேலி அமைத்து அதனை திறந்து வைப்பதற்காக பிரதம அதிதியாக ஜெனரல் சவேந்திர சில்வாவை அழைத்திருந்தனர். மேலும் விகாரையின் தகோபாவின் (பாகொடா) மறைந்த போர் வீரர் நினைவாக அவரது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கட்டப்பட்டது, லெப்டினன்ட் பிரசன்ன அரியரத்ன அவர்களின் ஆத்மா சாந்திக்கான செத் பிரித் பாராயணம் வணக்கத்திற்குரிய தேக்கவத்தை பங்ஞானந்த தலைமை தேரரின் தலைமையில் வணக்கத்திற்குரிய பயகல மாலேகொட ஸ்ரீநந்தன வணக்கத்திற்குரிய பலத்தொட பன்னானந்த தேரோ மற்றும் தேரர்களினால் நடாத்தப்பட்டன.

பிரதம விருந்தினரை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பரிபாலன சபையினர் அன்புடன் வரவேற்றனர். அனைத்து இலங்கை பௌத்த காங்கிரசின் தேசிய சமூக சேவைகள் சபையினால் நிர்வகிக்கப்படும் மெற்படி நிலையத்தில் நோய்வாய்ப்பட்ட மற்றும் வயதான புத்த பிக்குகள் பராமரிக்கப்படுகின்றனர்.

1989 ஜனவரி மாதம் 20 இராணுவத்தில் இணைந்துக் கொண்ட மறைந்த போர் வீரர் பாக்கிஸ்தான் இராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்றார், அவர் 1990 ஒக்டோபரில் இலங்கை இராணுவ பயிற்சி கல்வியற் கல்லூரியில் பயிற்சியினை நிறைவு செய்துக் கொண்ட பின் 6 கஜபா நியமிக்கப்பட்டார்.

அந்நிகழ்வில் பௌத்த துறவிகள், உறவினர்கள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். best Running shoes | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ