18th February 2021 19:48:33 Hours
நாரஹேன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மை தாங்கிய.கோபால் பாக்லே மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று (17) காலை கொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இதன்போது பாரளுமன்ற சபாநாயகர் மஹிந்தா யபா அபேவர்தன புதன்கிழமை (17) தடுப்பூசியை பெற்ற முதல் பாரளுமன்ற உறுப்பினர் ஆவார். அங்கு இராணுவ மருத்துவ குழுக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் மும்முரமாக இருந்தனர்.
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் இலங்கைக்கு தடுப்பூசிகளை விரைவாக வழங்குவதில் இந்தியாவின் தாராள மனப்பான்மைக்கு ஜெனரல் சவேந்திர சில்வா இந்திய உயர் ஸ்தானிகரிடம் நன்றி பாராட்டினார், இது இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நல்லெண்ணம் மற்றும் நல்ல உறவுகளை அடையாளப்படுத்துகிறது. மேலும் படையினர் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி வழங்க முடிந்தமையானது வைரஸ் பரவலினை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் பயனளித்துள்ளது.
கௌரவ சபாநாயகரும் இந்திய உயர் ஸ்தானிகருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார், மேலும் இந்த தாராள மனப்பான்மைக்கு இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு இணைப்பதிகாரி லெப்டினன்ட் கேணல் புனீத் சுஷில், இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கிருஷாந்தா பெர்னாண்டோ, இராணுவ வைத்தியசாலை பணிப்பாளர் கேணல் சவீன் செமகே, இலங்கை இராணுவ தடுப்பு மருத்துவ சேவைகளின் பிரதி பணிப்பாளர் மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். Running sneakers | Air Jordan