16th February 2021 10:22:38 Hours
வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதியும் சிங்கப் படையின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் வழிக்காட்டலில் 8 வது இலங்கை சிங்க படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் குமார அத்துகோரலாவின் மேற்பார்வை சிங்கப் படையினரால் காலஞ் சென்ற படை வீரருக்காக இலுக்தென்ன ரம்புக்கனையில் நிர்மானிக்கப்பட்ட புதிய வீட்டினை சனிக்கிழமை (6) குறித்த போர் வீரரின் குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டது.
தியாக படைவீரர் விவகார பணிப்பகம் மற்றும் இலங்கை சிங்க படையின் சேவை வனிதையர் பிரிவு ஆகியவற்றின் நிதி பங்களிப்பில் இலுக்தென்ன கிராமத்தில் வசித்து 9 சிங்க படையின் மறைந்த கோப்ரல் பி.எல்.டி ஜி பந்துலவின் குடும்பத்தின் உறுப்பினர்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த வீட்டை நிர்மாணித்தனர்.
இந்த நடவடிக்கைக்கு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் கருத்தியல் வழிகாட்டுதலுக்கு இணங்க, சிங்கப் படையின் படைத் தலைமையகம் மறைந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் பல வீடுகளை இராணுவத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் நிர்மானித்துள்ளது.. சிங்கப் படையின சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிரோமி பண்டார 8 வது சிங்கப் படையின் கட்டளை அதிகாரியுடன் இணைந்து மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் நாடாவை வெட்டி வீட்டை திறந்து வைத்தனர். இந்த புதிய வீட்டிக்கான செலவு சுமார் 1.5 மில்லியன் ரூபா ஆகும்.
விழாவின் போது பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். Authentic Sneakers | Men’s shoes